search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியா ஓபன்"

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் காலிறுதியில் பிவி சிந்து, பிரணாய் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர். #IndonesiaOpen
    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்தாவில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் மற்றும் பெண்கள் ஒற்றையருக்கான காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சீனாவின் ஹி பிங்ஜியாவோவை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 14-21, 15-21 நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

    ஆண்களுக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் எச்எஸ் பிரணாய் சீனாவைச் சேர்ந்த ஷி யுகியை எதிர்கொண்டார். இதில் பிரணாய் 17-21, 18-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். ஷி யுகி உடன் பிராணய் நான்கு முறை மோதியுள்ளார். இதில் மூன்று முறை தோல்வியை சந்தித்துள்ளார்.



    பிவி சிந்து முதல் செட்டில் இரண்டு முறை சமநிலை அடைந்தார். ஆனால் முதல் பாதி நேரத்தில் 10-11 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் பின்தங்கினார். 2-வது பாதி நேரத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோ தொடர்ச்சியாக 6 புள்ளிகள் பெற்றதால் பிவி சிந்து 14-21 எனத் தோல்வியடைந்தார்.

    2-வது செட்டில் பிவி சிந்து 6-3 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் ஸ்கோர் 7-7 என சமநிலை அடைந்தது. அதன்பின் ஹி பிங்ஜியாவோ 11-8 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் பிவி சிந்து முன்னிலை பெற முயன்றார். ஆனால் ஹி பிங்ஜியாவோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சிந்து 15-21 என 2-வது செட்டை இழந்தார்.
    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து 2-வது சுற்றில் அயா ஒஹோரியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். #PVSindhu
    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை எதிர்கொண்டார்.

    இன்றுடன் 23-வது வயதை நிறைவு செய்யும் பிவி சிந்து, பிறந்த நாள் அன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினார். அவர் நினைத்தபடியே 2-வது சுற்று எளிதாக அமைந்தது. முதல் செட்டை 21-17 எனவும், 2-வது செட்டை 21-14 எனவும் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.



    இந்த வெற்றியின் மூலம் அயா ஒஹோரியை 5-வது முறையாக பிவி சிந்து வீழ்த்தியுள்ளார். இந்த வெற்றியை பெற பிவி சிந்துவிற்கு 36 நிமிடங்களே தேவைப்பட்டது.
    ×